என்ன ஆகணும் உங்களுக்கு? ஷிவானியை மடக்கிய ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கலகலப்பாக தொடங்கி நேற்று முதல் நாள் நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகிவிட்டன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முதல்நாள் நிகழ்ச்சி இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளின் புரோமோ சற்றுமுன் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் எதிர்பார்த்தது போலவே ஷிவானியை மையப்படுத்தியே அனைத்து காட்சிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இன்ஸ்டாகிராமில் ஷிவானிக்கு இருக்கும் ஃபாலோயர்ஸ்கள் குறித்து பெருமையாக சோம் மற்றும் பாலாஜி முருகதாஸ் அவரை ஊக்கப்படுத்தினர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் ஆரி, ஷிவானியை அதே விஷயத்தை வைத்து மடக்கினார்

’நீங்கள் தினமும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்கிறீர்கள். அதை பார்ப்பதற்கு என்ற ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதற்காக இதை எல்லாம் செய்கிறார்கள்? என்று ஷிவானியை மடக்கி ஒரு கேள்வி கேட்கிறார்

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியபடி ஷிவானி இருக்கும் காட்சியுடன் இந்த புரமோ முடிகிறது. ஏற்கனவே நேற்றைய நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் ஷிவானிக்கு புரோக்கன் ஹார்ட் பதிவு செய்து அவரை கார்னர் செய்த நிலையில் தற்போது மீண்டும் அவரை கார்னர் செய்வதால் இரண்டாவது நாளிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… பகவத் கீதை வழியே ஓபிஎஸ் சொல்ல வருவது???

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

பாவப் பட்டவர்களுக்கே அறிவுரை சொல்வதா? இதென்ன நியாயம்? ராகுல் காந்தி காட்டம்!!!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

50 கிராம் பொங்கல் எப்படி 220 கிராமாக மாறும்??? ரயில்வே துறையின் அறிவிப்பால் பொங்கிப்போன வாடிக்கையாளர்கள்!!!

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் கடும் வைரலாகி இருக்கிறது. திருச்சியில் இருந்து சென்னையை

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு… பரபரப்பு தகவல்!!!

2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் துவங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

19 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 38 வயது எம்.எல்.ஏ: மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி

19 வயது கல்லூரி மாணவி ஒருவரை 38 வயது எம்எல்ஏ ஒருவர் இன்று காலை திருமணம் செய்ததை அடுத்து கல்லூரி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது