இன்று குட்டித்தல, அடுத்தது தல, தளபதி தான்: ஷிவாங்கிக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் பின் தற்போது ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்ச கட்டத்திற்கு சென்று உள்ளார் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. அவருடைய கள்ளங்கபடமில்லாத நகைச்சுவையான பேச்சு, அஸ்வினிடம் அவர் கொஞ்சம் ரொமான்ஸ் மற்றும் புகழிடம் அவர் வைத்திருக்கும் சகோதர பாசம் மற்றும் செல்லச் சேட்டைகள் ஆகியவை காண்பதற்கு ரசிக்கத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவாங்கி சமீபத்தில் குட்டி தல என்று அன்போடு கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் ஏராளமானோர் ஷிவாங்கிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று குட்டி தல, அடுத்தது தல தோனி, தல அஜித், தளபதி விஜய்யோட போட்டோ எடுக்கணும் என்று ரசிகர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குட்டித்தல சுரேஷ் ரெய்னாவுடன் ஷிவாங்கி எடுத்த இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.