'குக் வித் கோமாளி' செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சியிலேயே அதிக வரவேற்ப்பை பெற்றது அனேகமாக ’குக் வித் கோமாளி சீசன் 2 என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் இன்னும் பழைய நிகழ்ச்சிகளை பலர் ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்று ஆகும்

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் ஆகியவர்கள் வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் இவர்களில் பலர் திரையுலகிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் புகழ், ஷிவாங்கி ஆகியோரும் நடிக்க தொடங்கிவிட்டனர் என்பதும், தர்ஷா பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சி பலரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த நிலையில் குக் வித் கோமாளி செட்டுக்கு மீண்டும் ஷிவாங்கி சென்ற வீடியோ காட்சி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ‘இங்கே தான் நான் நின்று கொண்டிருப்பேன், இங்கே 3 கேமராக்கள் இருக்கும், அங்கே புகழ் அண்ணன் இருப்பார், என்னை பார்த்தவுடன் ஓடி வருவார், என்று ஷிவாங்கி தனது மலரும் நினைவுகளை கூறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் மீன் வாங்க குவிந்த கூட்டம்: கொரோனாவுக்குத்தான் கொண்டாட்டம்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரசால் பலியாவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே

நேற்று கொல்கத்தாவை துவம்சம் செய்த பிரித்விஷாவின் காதலியா இந்த நடிகை?

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா துவம்சம் செய்தார்

கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் பிரபல நடிகர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் படு மோசமான நிலையை இருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

தமிழ் பெண்ணின் மாஸ்க் ஸ்டைல பாருங்க… இளம் நடிகையின் அட்டகாசமான புகைப்படம் வைரல்!

தமிழில் ஆஸ்தான நடிகரான கமல்ஹாசனின் மூத்தமகள் நடிகை ஸ்ருதிஹாசன்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர்....! அதிரடி கைது...!

சென்னையில் ரெம்டெசிவர் மருந்தை  கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.