close
Choose your channels

அவரு அதுக்கும் மேல.. அஸ்வின் குறித்து ஷிவாங்கியின் வீடியோ 

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதும் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய ரசிகர்களைப் பெற்ற நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சிக்காக பலர் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ‘குக்’களை விட கோமாளிகளின் அட்டகாசம் மற்றும் நகைச்சுவை ரசிக்க வைக்கும் என்பதும் குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், அஸ்வின் மற்றும் ஷிவாங்கியின் ரொமான்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அஸ்வின் குறித்து ஷிவாங்கி கூறியிருப்பதாவது: அஸ்வின் ரொம்ப இனிமையானவர். அருமையான ஒரு மனிதர். நீங்கள் அவரை பற்றி என்ன நினைக்கின்றீர்களோ அவர் அதுக்கும் மேல இருப்பார். அவர் என்ன சமைத்தாலும் சூப்பராக இருக்கும். அதனால் அவர் எப்போது சமைத்து முடிப்பார் என்று நாங்கள் காத்திருந்து அவரிடமிருந்து புடுங்கி சாப்பிடுவோம். மேலும் அவர் மிகவும் ஒரு நகைச்சுவையான மனிதர். இதனை நீங்கள் போகப்போக பார்ப்பீர்கள் என்று கூறினார்

அதேபோல் புகழ் குறித்து கூறும்போது ’என்னுடைய கூட பிறக்காத அண்ணன். என்னை நிறைய இடத்தில் காப்பாற்றியுள்ளார். அவருடைய வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர் எங்கிருந்து இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே பார்த்திருக்கின்றேன். அவருடைய வளர்ச்சி ஒரு தங்கையாக எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கின்றது’ என்று கூறியுள்ளார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment