அஸ்வின் கதாநாயகன், ஷிவாங்கி பாடகி....! வெளிவரவிருக்கும் புதிய பாடல்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
"குக் வித் குமாளி" யின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின் மற்றும் பாடகி ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த, இவர்கள் இருவருமே தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். அஸ்வின் நடிப்பில் வெளியான ‘குட்டி பட்டாஸ்’ என்ற ஆல்பம் பாடல், யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்துள்ளது. இதேபோல் கவின் நடிப்பில், ஷிவாங்கி குரலில் வெளியான "அஸ்குமாரோ" ஆல்பம் பாடலும் 35 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
இதன் வெற்றியை தொடர்ந்து அஸ்வினும், ஷிவாங்கி-யும் புதிய ஆல்பம் பாடல் ஒன்றில் இணையவுள்ளனர். ஓணம் பண்டிகை வரவிருப்பதால், அதையொட்டி வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி ‘அடிபொலி’ என்ற பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்க, சூப்பர் சிங்கர் வினீத் ஸ்ரீனிவாசனும், ஷிவாங்கி-யும் பாடியுள்ளனர். இவர்களின் முதல் காம்போ பாடல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments