ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே சிரம்ப்பட்டு வருகின்றனர். ஒரு குழந்தைக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் ஆகிய செலவுகளுக்கே பெற்றோர்களின் உழைப்பு கரைந்து போகின்றது. இந்த நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகளை வளர்க்க அந்த பெற்றோர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை
ஆம், ஸ்ரீனிவாசன், யத்ரி என்ற தம்பதிக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. லக்‌ஷன், லக்‌ஷயா, லக்‌ஷிகா, லக்‌ஷா என்ற பெயருள்ள இந்த குழந்தைகளை வளர்க்க அவர்களது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வருவதை ஒரு பத்திரிகையாளர் மூலம் கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், இந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான படிப்பு, எதிர்கால தேவைகள் அனைத்துக்கும் தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார்.
லாரன்ஸ் அவர்களின் இந்த உதவிக்கு ஸ்ரீனிவாசன் - யத்ரி தம்பதிகள் ஆனந்தக்கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

More News

மீண்டும் இணையும் சூர்யா-ஹரி: 'சிங்கம் 4' தொடங்குகிறதா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி இணைந்து உருவாக்கிய சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சிங்கம் 3' படத்தின் வெற்றி விழாவில் விரைவில் 'சிங்கம் 4' படத்திற்காக சூர்யாவும் நானும் இணைவோம்' என்று ஹரி கூறியிருந்தார்...

திருமண நாளில் அஜித்-ஷாலினியை தவிக்க விட்ட செல்போன் நிறுவனங்கள்

நேற்று அஜித்-ஷாலினியின் திருமண நாள் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அவரவர் துறையில் மாஸ் காட்டியவர்கள் என்பதால் நேற்று சமூக வலைத்தளங்களில் கோடானு கோடி வாழ்த்துக்கள் குவிந்தது...

விஷ்ணு-அமலாபால் பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் நடித்

மனிதர்களை போல இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு. மத்திய அரசு ஆலோசனை

இந்தியாவில் உள்ளவர்கள் இனி ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இனி சாலைகளில் நடப்பதற்கு கூட ஆதார் கார்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

சச்சின் பிறந்த நாளுக்கு ரஹ்மான் கொடுத்த மறக்க முடியாத பரிசு

கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கர் நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' என்ī