'வேலைக்காரன்' சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பாஸ்' இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் 'வேலைக்காரன்' என்ற வெற்றி படத்தில் நடித்த நிலையில் தற்போது பொன்ராம் இயக்கி வரும் 'சீமராஜா' படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படத்தை அடுத்து அவர் 'இன்று நேற்று நாளை ' இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்றும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தை 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வசனங்களை எம்.ராஜேஷ் எழுதியுள்ள நிலையில் தற்போது முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்த படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.