நடுக்கடலில் தீப்பிடித்த 3000 டன் பெட்ரோல் டேங்கர் கப்பல்… மாயமான 14 மாலுமிகள்!!!

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

 

யாங்ட்சே நதி முகத்துவாரத்தில் சீனாவிற்குச் சொந்தமான பெட்ரோல் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் ஒன்று இன்னொரு கப்பல் மீது மோதியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. அக்கப்பலில் இருந்து 3 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில் மற்ற 14 மாலுமிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. விபத்துக்குள்ளான சீனாவின் டேங்கர் கப்பலில் 3000 டன் பெட்ரோல் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலை ஏற்றிச்சென்ற சீனக் கப்பல் அருகில் வந்த மணல் மற்றும் சல்லி ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல்மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாங்ட்சே நதி முகத்துவாரத்தில் இருந்து 1.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்தால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு தற்போது தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பதகாவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் மாயமான 14 மாலுமிகளை தேடும் பணியும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது

More News

நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ… உள்ளே மாட்டிக்கொண்ட 9 தொழிலாளர்கள்!!!

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர தீவித்து ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனாவுக்கு முன்- கொரோனாவுக்குப் பின்… திடுக்கிட வைக்கும் சில தகவல்கள்!!!

கொரோனா நோய்த்தொற்று மனித வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது.

விநாயக சதுர்த்தியின் கதை

உலகமுழுவதும் வாழும் இந்துக்களால் அதிகம் விரும்பி கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது விநாயக சதுர்த்திதான் என்று சொன்னால்

எலும்புக் கூடுகளால் நிரம்பி வழியும் ஏரி!!! திகிலூட்டும் மர்மப் பிண்ணணி!!!

இரண்டாம் உலகப்போருக்குபின் இமயமலைப் பள்ளத்தாக்கில் ஒரு மர்ம ஏரி இருப்பதை ஹரிகிருண மதுவால் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார்.

கோவில் வளாகத்தில் கொன்று புதைக்கப்பட்ட மளிகைக்கடை ஊழியர்: கள்ளக்காதலி உள்பட மூவர் கைது!

கோவில் வளாகத்தில் மளிகை கடை ஊழியர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது