நடுக்கடலில் தீப்பிடித்த 3000 டன் பெட்ரோல் டேங்கர் கப்பல்… மாயமான 14 மாலுமிகள்!!!
- IndiaGlitz, [Friday,August 21 2020]
யாங்ட்சே நதி முகத்துவாரத்தில் சீனாவிற்குச் சொந்தமான பெட்ரோல் ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் ஒன்று இன்னொரு கப்பல் மீது மோதியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. அக்கப்பலில் இருந்து 3 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில் மற்ற 14 மாலுமிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. விபத்துக்குள்ளான சீனாவின் டேங்கர் கப்பலில் 3000 டன் பெட்ரோல் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலை ஏற்றிச்சென்ற சீனக் கப்பல் அருகில் வந்த மணல் மற்றும் சல்லி ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல்மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாங்ட்சே நதி முகத்துவாரத்தில் இருந்து 1.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்தால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு தற்போது தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பதகாவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் மாயமான 14 மாலுமிகளை தேடும் பணியும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது