அடுத்தடுத்து வரும் 'பீஸ்ட்' அப்டேட்: லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்று அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டுக்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்தோம்.

குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்க இருப்பதாகவும், இதனை அடுத்து யோகிபாபு, விடிவி கணேஷ் மற்றும் லிலிபுத் ஃபரூக் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் இந்த படத்தில் இணைந்து உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அபர்ணாதாஸ், அங்குர் அஜித்விகால் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருவதை அடுத்து இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் 'மாறன்'

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாறன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

சிறுமி மித்ராவுக்கு செலுத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து: மீண்டு வர வாழ்த்துக்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி மித்ராவுக்கு அரிய வகை நோய் இருந்ததை அடுத்து அவருக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் குறித்த தகவலை

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி ஒப்பந்தம் இடையே செய்யப்பட்ட இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்

இந்தியாவுக்கு முதல் தங்கம்: அசத்தினார் நீரஜ் சோப்ரா!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளதை அடுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது