தமிழ் உள்பட பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த ஷில்பா ஷெட்டி.. செம போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் உருவான ’மிஸ்டர் ரோமியோ’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நாயகி ஆக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மேலும் அவர் விஜய் நடித்த ’குஷி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் உருவாகும் ’கேடி தி டெவில்” என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரபல கன்னட நடிகர் நடிகர் துருவா சார்ஜா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் ’கேஜிஎஃப்’ மற்றும் ’காந்தாரா’ போன்று பிரம்மாண்டமாக உருவாகி வரும் கன்னட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இந்த படத்தில் ஷில்பா செட்டி இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவர் இந்த படத்தில் சத்தியவதி என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் அவருடைய போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
1970களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் துருவா சர்ஜாவுடன், ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறுகையில்,“ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் கேடி தி டெவில், ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை. இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout