புது ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை மிரள வைத்த நடிகை ஷில்பா ஷெட்டி… வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Tuesday,October 19 2021]
பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து “மிஸ்ரா ரோமியோ“ படத்தில் நடித்திருந்தார். பின்பு “குஷி“ படத்தில் “ரோமியோ ஆட்டம் போட்டால்“ பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகை ஷில்பாவின் கணவர் ராஜ்குந்தரா ஆபாசப் பட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது புதுவிதமான ஹேர் ஸ்டைல் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இது நிறைய பேரை ஈர்த்திருக்கிறது என்று கேப்ஷன் பதிவிட்ட அவர் “நீங்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு வளையத்தை மீறாமல் ஆபத்தை எதிர்கொள்ளாமல் வாழமுடியாது” என்று குறிப்பிட்டு தனது அசுரத் தனமான எரோபிக் வொர்க் அவுட்டை செய்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டியின் எரோபிக் வொர்க் அவுட் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
யோகா, வொர்க் அவுட், ஆன்மீகம் என்று பல விஷயங்களில் ஆர்வம் காட்டிவரும் நடிகை ஷில்பா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தினம்தோறும் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இந்நிலையில் நடிகை ஷில்பா எரோபிக் வொர்க் செய்யும் வீடியோவில் தனது புது ஹேர் ஸ்டைலையும் ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார்.
பின்பக்க தலையில் சிறிதளவு முடியை மட்டும் வெட்டியிருக்கும் நடிகை ஷில்பாவின் புது ஹேர் ஸ்டைல், ரசிகர்களுக்கு கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக “Hungama 2“ திரைப்படத்தில் நடித்திருந்த அவர் அதற்குபிறகு டான்ஸ் குறித்த ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்து வருகிறார்.