ஒரு விஷயத்தை பத்தி தெரியாம பேசாதீங்க......! ஷில்பா ஷெட்டி ஆதங்க அறிக்கை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை நிலையை பற்றி அறிந்துகொள்ளாமல், தேவையில்லாமல் அரைகுறை கருத்துக்களை கூறாதீர்கள் என்று நடிகை சில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
ஆபாச படங்களை எடுத்ததற்காக, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார், இவருடன் சேர்ந்து 11 நபர்களும் கைது செய்யப்பட்டார்கள். இப்பிரச்சனை சமூகவலைத்தளங்களில் பூதாகரமாக வெடிக்க பலரும் இவர்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். ராஜ்குந்த்ரா மேல் ஒருசில நடிகைகள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது," கடந்த சில நாட்களாக எங்கள் மீது, ஏராளமான குற்றச்சாட்டுக்களும், வதந்திகளும் வந்த வகையில் உள்ளது. மீடியாக்களில், ஆதராமில்லாமல் கேலி, கிண்டல்களும், தாக்குதல்களும் எங்கள் குடும்பத்தாருக்கு வருகிறது.அது குறித்து நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால், தவறாக என் மீது பழி சுமத்த வேண்டிய அவசியமில்லை.ஒரு நடிகையாக நான் யாருக்கும், எந்த ஒரு புகாருக்கு விளக்கம் சொல்லக் கூடாது என்பது தான் என்னுடைய கொள்கை. தற்போது மும்பை போலீஸ் மற்றும் நீதித்துறை தகுந்த விசாரணை நடத்தி வருகிறது, அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்களால் முடிந்தவரை சட்டபூர்வமான முறையில் போராடி வருகிறோம். இதனால் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, எங்களுடைய தனிப்பட்ட வாழ்விற்கு மதிப்பளியுங்கள். ஒரு விஷயத்தில் உண்மை தன்மையை ஆராயாமல், அரைகுறையான கருத்துக்களை கூற வேண்டாம்.
சென்ற 29 வருடங்களாக நான் கடினமாக உழைத்து வரும், சட்டத்தை மதிக்கும் குடிமகள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால், குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள். ஊடகங்கள் விசாரிப்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் "சட்டம் அதன் கடமையைச் செய்யும் சத்யமேவ ஜெயதே"என்று பதிவிட்டுள்ளார்.
My statement. pic.twitter.com/AAHb2STNNh
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) August 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com