ஷில்பா ஷெட்டி கட்டியிருக்கும் இந்த புடவையின் விலை இவ்வளவா?

  • IndiaGlitz, [Tuesday,November 08 2022]

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார் என்பதும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் ஷில்பா ஷெட்டி புடவை அணிந்து பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் இருந்து அந்த புடவையின் விலை என்ன என்பது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதேபோல் விஜய் நடித்த ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 47 வயதான ஷில்பா ஷெட்டி தற்போது இரண்டு படங்களில் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டி சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 27 மில்லியன்கள் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் சேலை அணிந்து ஒரு ஸ்டில்லை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் உள்ள சேலையின் விலை என்ன என்பது குறித்து தகவலை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

ஷில்பா ஷெட்டி அணிந்திருந்த சேலையின் விலை ரூபாய் 18 ஆயிரத்து 500 என்று கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் சிம்பிளாக இருக்கும் இந்த சேலையின் விலை இவ்வளவா? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.