சினிமாவில் எண்ட்ரியாகும் முக்கிய கிரிக்கெட் பிரபலம்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் ஓப்பனராக இருந்துவரும் முக்கிய வீரர் ஒருவர் பாலிவுட் சினிமாவில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து இவரும் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் ஓப்பனராக இருந்துவரும் ஷிகர் தவான் தற்போதைய ஐபிஎல் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார். தற்போதைய 15 ஆவது சீசன் போட்டிகளுக்காக இதுவரை 3 அரை சதங்களை வீசிய இவர் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் 4 ஆவது இடம்பிடித்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் ஷிகர் தவான் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதைத்தவிர கிரிக்கெட் கிரவுண்டிற்குள் இருக்கும்போது இவர் செய்யும் அல்ராசிட்டிக்கு அளவே இருக்காது எனும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஷிகர் தவான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் துவங்குதவதற்கு முன்பே பாலிவுட் சினிமா ஒன்றில் ஹீரோவாக நடிக்கத் துவங்கியதாகவும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்திவரும் நிலையில் போட்டி முடிந்தவுடன் மீண்டும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஷிகர் தவான் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தத் தகவல் அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சர்யத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments