பறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஒரு படகு சவாரியின்போது பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். காரணம் இந்தியாவில் தற்போதுவரை 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு இடையில் இந்தியாவில் பறவைக் காயச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டு உள்ளன.
இந்நிலையில் ஷிகர் தவான் வாரணாசியில் படகு சவாரி செய்தபோது பறவைகளுக்கு உணவு அளித்ததோடு அதுகுறித்த புகைப்படத்தை “Happiness is feeding Birds” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதனால் அவரது செயலுக்கு விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து அங்குள்ள கலெக்டர், படகு ஓட்டிகள் தன்னுடைய படகில் பயணம் செய்பவர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும். மேலும் அங்கு வரும் பறவைகளிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் உணவு கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை படகு ஓட்டிகள் மீண்டும் செய்தால் தண்டனை விதிக்கப்படும் என கூறி இருக்கிறார். இந்நிலையில் பறவைக் காய்ச்சல், கொரோனா போன்ற கட்டுப்பாடுகளினால் இவர் மட்டுமல் உலகில் உள்ள பல்லாயிரக் கணக்கானோர் இயல்பு வாழ்க்கையில் இருந்து தள்ளி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது எனக் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout