ஒரு மாதத்தில் திருமணமா? நடிகை ஷெரின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Friday,April 21 2023]

நடிகை ஷெரின் சமீபத்தில் ரசிகர் ஒருவரிடம் சமூக வலைத்தளத்தில் உரையாடிய போது உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பல ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இன்னும் ஒரு மாதத்தில் ஷெரினுக்கு திருமணம் என்று செய்திகள் பரவின. இந்த நிலையில் இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகைகள் ஒருவர் ஷெரின் என்பதும் அவர் தனுஷ் அறிமுகமான ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’விசில்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் என்பதும் அவரது காமெடி சென்ஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு மாதத்தில் திருமணம் என்று தான் கூறியது குறித்து ஷெரின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது ’சமீபத்தில் ரசிகர் ஒருவர் என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்ட போது ஒரு மாதத்தில் திருமணம் என்று காமெடியாக கூறினேன். இதை இவ்வளவு பெரிய செய்தி ஆக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் என்று சொன்னது நான் முழுக்க முழுக்க காமெடி தான், எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.