கொரோனா பரபரப்பிலும் கிளுகிளுப்பான வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரி எனப்வரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரேயா ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் ஸ்ரேயாவும், அவருடைய கணவரும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோவை ஸ்ரேயா அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘நான் ஏன் ஆண்ட்ரியை திருமணம் செய்தேன் தெரியுமா? என் எனக்கு கணவர் பாத்திரம் தேய்த்துக் கொடுத்து உதவி செய்கிறார். ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவிக்கு இப்படி ஏதாவது உதவி செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு கணவர் ஆண்ட்ரிக்கு லிப்கிஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். கிளுகிளுப்பான இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஸ்ரேயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout