யார் இந்த சேகர் ரெட்டி? வருமான வரித்துறையினர்களிடம் சிக்கியது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய வருமான வரித்துறையினர்களின் சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது சகாவான சீனிவாசலு ஆகியோர் மீது 3 பிரிவிகளின் கீழ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில்ல் சேகர் ரெட்டியும், சீனிவாசலுவும் நேற்று கைது செய்யப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி. இவர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததராகவும், கட்டுமான தொழிலும் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளை, சேகர் ரெட்டி தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார். ஆட்சியாளர்களுக்கும் போயஸ் கார்டன் வட்டாரங்களுக்கும் நெருக்கமானவர் என்று கூறப்படும் இவர் திருப்பதி அறங்காவலர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்த பதவிக்கு இவர் தமிழக அரசினால் பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரு.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுப்பதாகவும், ஏராளமான ரொக்கப் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதுகுறித்து விசாரணை செய்யவே வருமான வரித்துறையினர் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தனர். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் இந்த சோதனையில், கோடிக்கணக்கான பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கான மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதுமட்டுமின்றி பல அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையில்தான் நேற்று தலைமைசெயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த சோதனை தொடரும் என்றும் இன்னும் ஒருசில நாட்களில் இன்னும் ஒருசில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் போயஸ் தோட்டத்திற்கு நெருக்கமானவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழகம் மீண்டும் ஒரு பரபரப்பிற்கு தயாராகியுள்ளதாகவே தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com