ஒரே பாத்டேப்பில் கணவருடன் குளியல்: மாலத்தீவில் ரொமான்ஸ் செய்த பிக்பாஸ் நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,March 23 2021]

கடந்த சில மாதங்களாக நடிகைகள் பலர் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் சமீபத்தில் கணவருடன் மாலத்தீவு சென்ற நடிகை ஒருவர் ஒரே பாத்டேப்பில் கணவருடன் இணைந்து குளித்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன.

தொலைக்காட்சி மற்றும் பாலிவுட் திரைப்பட நடிகை ஷெஃபாலி ஜரிவாலா கடந்த 2004ஆம் ஆண்டு ஹர்மித்சிங் என்பவரை திருமணம் செய்து அதன்பின் 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது பராக் த்யாகி என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக் பாஸ் ஹிந்தி சீசன் 13ன் போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஷெஃபாலி ஜரிவாலா தனது கணவருடன் மாலத்தீவு சென்ற நிலையில் அங்கு தனது கணவருடன் இணைந்து ஒரே பாத்டேப்பில் குளித்த ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.