'விசுவாசம்' படத்தில் நயன்தாரா கேரக்டர்: ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிவடைந்தது. அதன்பின்னர் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி நயன்தாரா முதல்கட்ட படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விசுவாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.