மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிவிட்ட பிரபல அரசியல்வாதி… அவரே ரசித்த வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காங்கிரஸ் கட்சியில் முக்கிய அரசியல் தலைவராக இருந்துவரும் சசிதரூர் பற்றிய மீம்ஸ்கள்தான் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பட்டையை கிளப்பி வருகிறது. இத்தனைக்கும் அவர் செய்தது எல்லாம் கோவிலுக்கு சென்றபோது தேங்காய் உடைத்ததுதான் என்றால் நம்பமுடிகிறதா?
காங்கிரஸ் கட்சியில் பங்காற்றிவரும் சசிதரூர் திருவனந்தபுரத்தின் எம்.பி. என்பது பலரும் தெரிந்ததுதான். அவருடைய சொந்த ஊரும் அதுதான். இந்நிலையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அவர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அப்போது கையில் ஒரு தேங்காயை எடுத்து சிதறு தேங்காய் உடைத்து இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் மீடியாக்களில் வெளியாகியது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நம் மீம்ஸ் கிரியேட்டர்கள் தேங்காய் உடைப்பதை வீரசாகசம் என நினைத்துக் கொண்டார்களோ? என்னமோ? இதனால் தற்போது சசிதரூர் கையில் தேங்காயை வைத்துக் கொண்டு கிரிக்கெட் கிரவுண்ட்டில் பந்தை த்ரோ செய்வது, பாக்சிங் ரிங்கில் நின்றுகொண்டு எதிராளியின் தலையில் தேங்காயை வைத்து அடிப்பது, டீக்கடையில் டீயை படு ஆவேசமாக ஆற்றுவது, பரதநாட்டியக் கலைஞர்களுடன் பரதநாட்டியம் ஆடுவது, சலவை செய்யும் இடத்தில் வெறிப்பிடித்து துணி துவைப்பது என்று பல இடங்களிலும் அசால்ட் காட்டுகிறார்.
இதைத்தவிர Fast and Furiours திரைப்படத்தில் எண்ட்ரி கொடுத்தல் எப்படி இருக்கும்? ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதுவரை மீம்ஸ் கிரியேட்டர்கள் கற்பனை குதிரையை பறக்க விட்டிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இத்தகைய மீம்களைப் பார்த்த எம்.பி சசிதரூர் தன்னைப் பற்றி வந்த மீம்களை ரசித்தபடி அவரே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments