சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சுனந்தா புஷ்கரை அவரது கணவர் சசி தரூர் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது 2 பிரிவுகளில் டெல்லி காவல்துறையினர் வழக்கு செய்தனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் சசிதரூர் குற்றவாளி இல்லை என்றும் அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்ட சசிதரூர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என நீதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த ஏழரை ஆண்டுகளாக தான் வேதனையை அனுபவித்து வந்ததாகவும் தற்போது தான் தனக்கு நிம்மதி ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.