'96' பட நாயகனுக்கு திடீர் விபத்து! எலும்பு முறிந்ததால் அறுவை சிகிச்சை
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட்டான '96' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ராம் கேரக்டரில் சர்வானந்த், ஜானு கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது
இந்த நிலையில் தாய்லாந்தில் ஸ்கை டிவைங் செய்து கொண்டிருந்த சர்வானந்த் திடீரென ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு உள்பட ஒருசில காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாகவும், இன்னும் இரண்டு மாதங்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
எனவே '96' படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னரே நடைபெறும் என தெரிகிறது. '96' தமிழ்ப்படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout