96 தெலுங்கு ரீமேக்: ராம், ஜானு கேரக்டரில் நடிப்பது யார்?

  • IndiaGlitz, [Saturday,January 19 2019]

கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று '96'. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களது பள்ளி காலத்து மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றதே இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். அதேபோல் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் ராம், ஜானு கேரக்டரில் நடிக்காமல், வாழ்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் '96' படத்தின் கன்னட ரீமேக் படமான '99' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. அதேபோல் இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும், ராம், ஜானு கேரக்டர்களுக்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது '96' தெலுங்கு ரீமேக்கில் ராம் கேரக்டரில் சர்வானந்த் மற்றும் ஜானு கேரக்டரில் சமந்தா நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரேம்குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.