நின்று போனதாக சொல்லப்பட்ட ‘எங்கேயும் எப்போதும்‘ பட நடிகரின் திருமணம் குறித்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டதாக சமூகஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதை மறுத்து தன்னுடைய திருமணத் தேதியை அறிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பாரட்டைப் பெற்றவர்தான் நடிகர் சர்வானந்த். இவர் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். ‘பிரஸ்தானம்‘, ‘ரன் ராஜா ரன்‘, ‘மல்லி மல்லி இன் ராணி ரோஜு‘ போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ‘நாளை நமதே‘, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை‘, ‘கனம்‘ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கு சினிமாவின் முக்கியப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவருடைய நிச்சயதார்த்தம் தோல்வியில் முடிந்ததாகச் சில சமூகஊடகங்களில் வதந்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் லண்டனில் இருந்து திரும்பி வந்துள்ள நடிகர் சர்வானந்த் தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வரும் ஜுன் 3 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் தனக்கும் தொழில்நுட்ப வல்லுநரான ரக்ஷிதாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் இதற்கான அழைப்பிதழ்கள் தயாராகி விட்டதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர் சர்வானந்த் பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வந்தார். இதற்காக லண்டனில் நடைபெற்ற படப்பிடிப்பில் 40 நாட்கள் அவர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்தம் தோல்வியில் முடிந்ததாக சோஷியல் மீடியாவில் வதந்திகள் பரவின என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சர்வானந்த் தனது திருமணத் தேதியை அறிவித்துள்ளார். அவர் திருமணம் செய்துகொள்ள விருக்கும் ரக்ஷிதா தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகர் போஜ்ஜலா கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments