close
Choose your channels

சொகுசு படகில் ஷாருக்கான் - நயன்தாரா பாடல் காட்சி.. வீடியோ கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி..!

Thursday, April 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா சொகுசு படகில் பாடல் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு மும்பையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் சொகுசு படகில் நடந்த இந்த பாடல் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் ஷாருக்கான் பாடலுக்கு நடனம் ஆடுவது போன்று காட்சி உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு ஃபராக் கான் நடன இயக்குனராக பணிபுரிந்த உள்ளதாகவும், அர்ஜித் சிங் என்பவர் இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’ஜவான்’ படத்தின் முக்கிய பாடல் காட்சியின் படப்பிடிப்பு குறித்த வீடியோ இணையதளங்களில் கசிந்து உள்ளதை அடுத்து அட்லி உள்பட ’ஜவான்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment