ஒரே படத்தில் ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், ரன்பீர் கபூர்.. அறிமுக இயக்குனருக்கு ஜாக்பாட்..!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

ஒரு திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் சேர்ந்து நடிப்பது அரிதான ஒன்று, ஆனால் ஒரே படத்தில் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய நான்கு பிரபல நடிகர்களும் இன்னும் சில முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குவது ஒரு அறிமுக இயக்குனர் என்பதும், அவர் சல்மான் கான் மகன் ஆர்யன் கான் என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தனது வாரிசுகளையும் திரைப்படத்துறையில் அறிமுகம் செய்துள்ளார் என்பது தெரிந்தது. ஏற்கனவே ஷாருக்கான் மகள் சுஹானா கான் ஒரு படத்தில் நடித்து வருகிறார், மேலும் அந்த படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், டைகர் அண்ட் பதான் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் ஓடிடியில் வெப் தொடராக வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொடரில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சல்மான் கான், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஒரே எபிசோடில் நடிக்காமல், தனித்தனி எபிசோடுகளில் தோன்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

More News

த்ரிஷாவுக்காக ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த குத்துப்பாட்டு.. இன்னொரு 'மட்ட' சாங் ரெடியா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் 'மட்ட' என்ற பாடலில், விஜய் மற்றும் த்ரிஷா அட்டகாசமாக நடனமாடி இருப்பார்கள் என்பதும், இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தே.

பெரியாருக்கு வாழ்த்து மட்டுமல்ல.. மரியாதையும் செய்த தவெக தலைவர் விஜய்.. திராவிட அரசியலா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அதன் பின்னர் சில நிமிடங்களில் தந்தை பெரியாருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட் பதிவு செய்த கமல்-ரஜினி.. யாருக்கு வாழ்த்து?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இருவரும் தங்கள் எக்ஸ் பக்கங்களில் அடுத்தடுத்து சில நிமிடங்களில் ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

தனுஷின் அடுத்த படம்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷின் 50வது திரைப்படமான "ராயன்" சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின், அவர் தனது 51வது படமான "குபேரன்

ஓடிடியில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற,  'டிமான்ட்டி காலனி 2'. எந்த ஓடிடி? என்ன தேதி?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்  இரண்டாம் பாகமான  'டிமான்ட்டி காலனி 2' திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று