ஒரே படத்தில் ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், ரன்பீர் கபூர்.. அறிமுக இயக்குனருக்கு ஜாக்பாட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் சேர்ந்து நடிப்பது அரிதான ஒன்று, ஆனால் ஒரே படத்தில் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய நான்கு பிரபல நடிகர்களும் இன்னும் சில முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குவது ஒரு அறிமுக இயக்குனர் என்பதும், அவர் சல்மான் கான் மகன் ஆர்யன் கான் என்றும் கூறப்படுகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தனது வாரிசுகளையும் திரைப்படத்துறையில் அறிமுகம் செய்துள்ளார் என்பது தெரிந்தது. ஏற்கனவே ஷாருக்கான் மகள் சுஹானா கான் ஒரு படத்தில் நடித்து வருகிறார், மேலும் அந்த படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், "டைகர் அண்ட் பதான்" என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் ஓடிடியில் வெப் தொடராக வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொடரில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சல்மான் கான், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஒரே எபிசோடில் நடிக்காமல், தனித்தனி எபிசோடுகளில் தோன்றுவார்கள் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments