டென்னிஸ் வீராங்கனைக்கு காதலனாக ஆசைப்பட்ட ஷாருக்கான்.. அதற்கு அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்திய திரை உலகில் உள்ள பல முன்னணி நடிகைகளே ஆசைப்படும் நிலையில் ஷாருக்கான் ஒரு டென்னிஸ் வீராங்கனைக்கு காதலனாக நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த டென்னிஸ் வீராங்கனை கூறிய பதில் தான் ஆச்சரியமானது.
கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ’பதான்’ ‘ஜவான்’ மற்றும் ’டங்கி’ ஆகிய மூன்று படங்கள் வெளியானது என்பதும் மூன்றுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் ’கிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’உங்களுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் உங்கள் காதலராக நடிக்க ஆசைப்படுவதாக ஷாருக்கான் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சானியா மிர்சா ’முதலில் அதற்கு நான் ஒரு காதலரை தேட வேண்டுமே’ என்று பதில் அளித்தார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை சானியா மிர்சா வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் ஷாருக்கான் ஆசைப்பட்ட படியே அவரை நடிக்க அனுமதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments