டென்னிஸ் வீராங்கனைக்கு காதலனாக ஆசைப்பட்ட ஷாருக்கான்.. அதற்கு அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்திய திரை உலகில் உள்ள பல முன்னணி நடிகைகளே ஆசைப்படும் நிலையில் ஷாருக்கான் ஒரு டென்னிஸ் வீராங்கனைக்கு காதலனாக நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த டென்னிஸ் வீராங்கனை கூறிய பதில் தான் ஆச்சரியமானது.

கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ’பதான்’ ‘ஜவான்’ மற்றும் ’டங்கி’ ஆகிய மூன்று படங்கள் வெளியானது என்பதும் மூன்றுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் ’கிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’உங்களுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் உங்கள் காதலராக நடிக்க ஆசைப்படுவதாக ஷாருக்கான் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சானியா மிர்சா ’முதலில் அதற்கு நான் ஒரு காதலரை தேட வேண்டுமே’ என்று பதில் அளித்தார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சானியா மிர்சா வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் ஷாருக்கான் ஆசைப்பட்ட படியே அவரை நடிக்க அனுமதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எம்.ஆர்.ராதாவின் தொழில் பக்தி - ராதா ரவி பேட்டி

நடிகர் எம் ஆர் ராதா ரவி அவர்கள் IndiaGlitz-க்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியில் இருந்து சில முக்கிய குறிப்புகள்

கெளதம் மேனன் அடுத்த படத்தில் நயன்தாரா? தயாரித்து நடிக்கும் பிரபல ஹீரோ..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் இல்லாத நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டதாக செய்திகள்

சுந்தர் சியின் அடுத்த படத்திலும் 'அரண்மனை 4' பிரபலம் தான்.. மீண்டும் ஒரு 100 கோடி வசூல் படமா?

சுந்தர் சி இயக்கி  நடித்த 'அரண்மனை 4' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது தெரிந்தது.

இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை - நடிகை ஸ்ருதிஹாசன் !!

இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு,

சல்மான்கான் - ஏஆர் முருகதாஸ் படத்தில் 2 ஹீரோயின்கள்.. 3 வில்லன்கள்.. மாஸ் தகவல்..!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 23'படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில்