காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி கூறிய ஷாருக்கான்

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது இந்திய திரையுலகமே அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து கூறியது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். தங்களுடன் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்த அனுபவம் இனிமையானது' என்று தெரிவித்திருந்தார்

யோகிபாபுவின் இந்த டுவீட்டுக்கு பதில் டுவீட் போட்ட ஷாருக்கான், 'நன்றி, அந்த படம் எனது நினைவிலும் இருக்கின்றது' என்று கூறியுள்ளார்.