தமிழ் படத்தை இயக்கும் ஷாருக்கான்: ஹீரோ யார்?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களுக்கு தமிழ் நட்சத்திரங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, கமல் ரஜினியுடன் நட்புடன் இருப்பது உள்பட அவரது தமிழக தொடர்பை விவரித்து கொண்டே போகலாம்.

மேலும் அட்லி இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்கான், ’எதிர்காலத்தில் தமிழ் படம் ஒன்றை இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்தார். அவ்வாறு ஷாருக்கான் தமிழ்ப்படம் இயக்கினால் அந்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் தங்கள் கற்பனைகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அஜித், விஜய், தனுஷ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்கான், ‘அஜித் தனது நண்பர் என்றும் விஜய் அருமையானவர் என்றும் தனுஷை நான் நேசிக்கின்றேன்’ என்றும் தெரிவித்தார்.
 

More News

விஜய் நாயகியின் பிகினி போஸ்: இணையத்தில் வைரல்!

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தின் நாயகியும் பிரபல தெலுங்கு நடிகையுமான இலியானா தனது சமூக வலைத்தளத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

49 பேர்கள் மீதான தேசத்துரோக வழக்கு: ஒரு குடிமகனாக கமலின் வேண்டுகோள்

மணிரத்னம், ரேவதி உள்பட 49 பேர் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 'சிறுபான்மையினர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருவதை நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

'தல 60' படத்திற்கு பாடல் எழுதுகிறாரா 'பிகில்' பாடலாசிரியர்?

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடலை எழுதி பெரும் புகழ் பெற்ற பாடலாசிரியர் விவேக், தற்போது 'பிகில்' படத்தில் 'சிங்கப்பெண்ணே' உள்பட அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

நான் நடித்த 15 படங்கள் ரிலீஸ் ஆகவில்லை: வருத்தத்தில் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். இவர் தொடர்ச்சியாக பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளது

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து லதா ரஜினிகாந்த் கருத்து!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு வருவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.