'தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பது யார்? புதிய தகவல்

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் அட்லி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் 'தெறி' கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிப்படத்தின் இந்தி ரீமேக்கில் அக்சயகுமார் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி 'தெறி' இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரோஹித் ஷெட்டி ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலே போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'தெறி' இந்தி ரீமேக் உரிமையை ரோஹித் ஷெட்டி பெற்றுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தை தயாரிக்கும் 5 பிரபல நிறுவனங்கள்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'அகிரா' படத்தின் இறுதிக்கட்ட...

விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்...

பிலிம்பேர் விருது-2016. சிறந்த நடிகர், நடிகை யார்? முழுவிபரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது...

'கபாலி'யின் ரகசியத்தை உடைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று உலக அளவில் பேசப்பட்டாலும் இந்த படம் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை தற்செயலாக நடந்தது...

பிலிம்பேர் 2016: நான்கு விருதுகளை அள்ளி குவித்த ஷங்கரின் 'ஐ'

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது...