விக்ரமின் 'கோப்ரா' படத்தில் இணைந்த மலையாள இளம் நடிகர்

  • IndiaGlitz, [Friday,January 31 2020]

சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது மலையாள இளம் நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ’ஜூன்’. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த Sharjano Khalid என்ற நடிகர் தற்போது 'கோப்ரா’ படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் Shane Nigam என்பவர் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிவிட்டதாகவும் அவருக்கு பதில் Sharjano Khalid ஒப்பந்தமாகியிருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா வைரஸ் பரவல் : சர்வதேச அவசர நிலை பிரகடனம் – WHO அறிவிப்பு

இந்தியா உட்பட கொரோனா வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவியுள்ளது. இதனை அடுத்து உலகச் சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. 

இதெல்லாம் பக்தியாலும், பயத்தாலும் வருவது: கமல்ஹாசன் டுவீட்

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதிய புத்தகம் ஒன்று பிப்ரவரி 2ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த புத்தக வெளியீட்டிற்கு அனுமதி தந்த

அமலாபாலை அடுத்து ஆடையின்றி நடித்த பிக்பாஸ் புகழ் நடிகை

பிரபல நடிகை அமலாபால் சமீபத்தில் வெளியான 'ஆடை' என்ற படத்தில் ஆடையின்றி நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்

CAA-வை கிழித்து எறிந்துவிட்டு அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை பின்பற்றுவோம்..! பாஜக எம்.எல்.ஏ.

நாட்டை எப்போதுமே மதத்தின் வழியில் பிரிக்கக்கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு, அனைத்து மக்களும் ஒன்றாக அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பின்பற்ற வேண்டும்

பிக்பாஸ் சரவணன் - மதுமிதா திடீர் சந்திப்பு: இணைந்து நடிக்கின்றார்களா?

பிக்பாஸ் சரவணன் - மதுமிதா திடீர் சந்திப்பு: இணைந்து நடிக்கின்றார்களா?