சூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரியனில் பூமியின் அளவைவிட பெரிய கரும்புள்ளி ஒன்று புதிதாக உருவாகி இருப்பதை சார்ஜா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்தக் கரும்புள்ளி உண்மையிலேயே சூரியனில் இருக்கும் ஓட்டை அல்ல என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மாறாக சூரியனின் மற்ற இடங்களில் இருக்கும் வெப்பத்தை விட புள்ளியாகத் தெரியும் இடத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும் இதனால் பூமிக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் அந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
உண்மையில் சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஒரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் வெகு தொலைவில் இருந்து பார்க்கும் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது. இந்த அளவு பூமியின் அளவைவிட அதிகமாக இருப்பதையும் அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். பொதுவாக சூரியனின் வெப்பம் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் தற்போது கரும்புள்ளியாக காட்சி அளிக்கும் இடத்தின் வெப்பநிலை 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.
ரேடியோ டெலஸ்கோப் எனப்படும் சிறப்பு தொலைநோக்கி கருவி மூலம் ஆய்வு செய்தபோது சார்ஜா விஞ்ஞானிகள் இந்த கரும்புள்ளியைக் குறித்து கண்டுபிடித்தனர். மேலும் இந்த கரும்புள்ளிக்கு “சைக்கிள் 25” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கரும்புள்ளி உருவாக்கத்தால் வருகிற 2022 இல் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் கடுமையான அதிர்வலைகள் தோன்றும் என்றும் அந்த அதிர்வலைகள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களின் இயக்கத்தை கெடுத்து விடும் எனவும் அந்த விஞ்ஞானிகள் எச்சசரித்து உள்ளனர்.
இதுபோல பூமியின் சுற்றுவட்டப் பாதையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தோன்றிய சூரிய புயலால் பூமியின் தாழ்வான வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டு இருந்த 2 செயற்கைக் கோள்கள் சேதமடைந்தது. இதுவரை இதுபோன்ற விளைவுகளால் 28 செயற்கைக்கோள் சேதமடைந்து இருக்கின்றன. தற்போது புதிதாக சூரியனில் ஏற்பட்டு இருக்கும் கரும்புள்ளி மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதனால் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout