எது பேசினாலும் தப்பாகுது: 'வலிமை' போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்த சாந்தனு புலம்பல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தின் அட்டகாசமான தோற்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டருக்கு தனது வாழ்த்தை தெரிவித்த நடிகர் சாந்தனு, ‘தல மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தீவிர விஜய் ரசிகரான சாந்தனுவின் இந்த கமெண்டுக்கு அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனம் செய்தனர். இதனால் சாந்தனு மிகுந்த வருத்தம் அடைந்து, ‘டுவிட்டரில் எது பேசினாலும் தப்பாகுது. நல்லவிதமா சொன்னாலும் வேறு மாதிரி மக்கள் அர்த்தம் எடுத்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் ஒரு நல்ல விஷயம் சொல்வதாக இருந்தாலும் அதை யோசித்து யோசித்து சொல்லணும் போல, சமூக வலைதளம் மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று கூறிய நடிகர் சாந்தனு, ‘என்ன இருந்தாலும் நான் தல அஜித்தின் லுக்கை ரசித்தேன், அதனால்தான் அந்த ட்வீட்டை பதிவு செய்தேன் என்று கூறினார்.
விஜய்யின் ரசிகராக இருந்தால் தல அஜித்தின் லுக்கை ரசிக்க கூடாதா என்ற கேள்வியை நடுநிலை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Twitter la edhu paesunaalum thappaagudhu!
— Shanthnu ?? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) July 13, 2021
Nalla vidhama sonnalum misinterpret aagudhu … Ppl were manipulating what I said , hence had to rephrase my previous tweet
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments