எது பேசினாலும் தப்பாகுது: 'வலிமை' போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்த சாந்தனு புலம்பல்!

  • IndiaGlitz, [Wednesday,July 14 2021]

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தின் அட்டகாசமான தோற்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போஸ்டருக்கு தனது வாழ்த்தை தெரிவித்த நடிகர் சாந்தனு, ‘தல மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தீவிர விஜய் ரசிகரான சாந்தனுவின் இந்த கமெண்டுக்கு அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனம் செய்தனர். இதனால் சாந்தனு மிகுந்த வருத்தம் அடைந்து, ‘டுவிட்டரில் எது பேசினாலும் தப்பாகுது. நல்லவிதமா சொன்னாலும் வேறு மாதிரி மக்கள் அர்த்தம் எடுத்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் ஒரு நல்ல விஷயம் சொல்வதாக இருந்தாலும் அதை யோசித்து யோசித்து சொல்லணும் போல, சமூக வலைதளம் மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று கூறிய நடிகர் சாந்தனு, ‘என்ன இருந்தாலும் நான் தல அஜித்தின் லுக்கை ரசித்தேன், அதனால்தான் அந்த ட்வீட்டை பதிவு செய்தேன் என்று கூறினார்.

விஜய்யின் ரசிகராக இருந்தால் தல அஜித்தின் லுக்கை ரசிக்க கூடாதா என்ற கேள்வியை நடுநிலை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More News

விஜய் உண்மையான ஹீரோ தான்: ஆதரவு தெரிவித்த பாஜக நடிகை

தளபதி விஜய்யின் கார் வரி குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த போது நீதிபதி 'சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கருத்து

மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்கிறேன்: முதலமைச்சரை சந்தித்தபின் வடிவேலு பேட்டி!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த வடிவேலு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சிக்கு

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லியான பர்கர்… ஒரு பீஸ் வெறும் ரூ.4 லட்சம்?

கொரோனா நேரத்தில் உணவக உரிமையாளர்கள் பலரும் கடையை இழுத்துப் பூட்டி விட்டு வீட்டில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனாவிற்குப் பிறகு 4 வாரத்தில் 4,000 கோடி வசூலித்த மாஸ் திரைப்படம்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு Fast&Furious சீரிஸ் வரிசையில் வெளியான F9- The fast saga எனும் ஹாலிவுட் திரைப்படம் வெறும் 4 வாரத்தில் 4,000 ஆயிரம் கோடிகளை வசூலித்து இருக்கிறது.

5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆணுறை வழங்கும் பள்ளிகள்! என்னதான் நடக்குது?

அமெரிக்காவின் சிகாகோ மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளே ஆணுறைகளை வழங்கி வருகின்றன.