தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிஸம், குரூப்பிஸமா? சாந்தனு டுவிட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே நெப்போட்டிஸம் என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாரிசுகள் மட்டுமே திரைத் துறையில் ஜொலிக்க முடியும் என்றும், புதியவர்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகவும், அந்த மன அழுத்தத்தில் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
இந்த நிலையில் திடீரென இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இந்தி படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கும்பல் தடுத்து வந்ததாக குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமின்றி ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி உள்பட ஒருசிலர் இந்த நெப்போட்டிஸம் குறித்த கருத்துக்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான நடராஜ், “தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க?” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நடராஜின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்த சாந்தனு பாக்யராஜ், “வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்” என்று கூறி பரபரப்பை மேலும் அதிகமாக்கியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் நெப்போட்டிஸம் இருப்பதாக கூறப்பட்டாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம், குரூப்பிஸம் இருக்க வாய்ப்பில்லை என்றும், அவ்வாறு இருந்தால் திரையுலக பின்னணியே இல்லாத சிவகார்த்தியன் உள்பட பல ஹீரோக்கள் முன்னணி இடத்தில் இருக்க முடியாது என்றும், தமிழ் சினிமாவில் வெற்றி பெற திறமை இருந்தால் போதும் என்றும் கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout