கே.வி.ஆனந்த் பாணியை கடைபிடிக்கும் அறிமுக இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,June 12 2016]

ஜீவா, கார்த்திகா நடிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய வெற்றிபடமான 'கோ' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் கோலிவுட்டின் பல பிரபல நடிகர், நடிகைகள் நடித்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக கருதப்பட்ட இந்த பாடல் போலவே தற்போது அறிமுக இயக்குனர் அதிரூபன் இயக்கி வரும் 'முப்பரிமாணம்' என்ற படத்தில் ஒரு பாடல் தயாராகியுள்ளது.
இந்த பாடலில் 27 முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜாக்கி ஷெராப், பிரபு, பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்யா, ராதிகா, பூர்ணிமா, விவேக், பார்த்திபன், வெங்கட்பிரபு, விஜய் ஆண்டனி, பாபிசிம்ஹா, சங்கீதா மற்றும் கிருஷ் உள்ளிட்ட பலர் இந்த பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனப்பயிற்சி அளித்துள்ளார். பிரமாண்ட செட் ஒன்றில் இந்த பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தம்பிராமையா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

'கபாலி' பட பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்யவும்

More News

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல பாலிவுட் நடிகை

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடிகை வித்யாபாலன் நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றார்...

After back to back super hits, Actor Jayam Ravi is currently busy shooting for 'Bogan' directed by Lakshman and after completing this film he will take up the film to be directed by Vijay...

'கபாலி' இசை விமர்சனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது...

விஜய் 61' குறித்த தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது...

எனக்கு கிடைத்த 'ரூபாய்'க்கு அமிதாப் தான் காரணம். சின்னிஜெயந்த்

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சின்னி ஜெயந்த் தற்போது தனுஷின் 'தொடரி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துள்ளார்...