இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்: 'தளபதி 64' நடிகரின் பரபரப்பு டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பிற்கு விஜய் வரும்போதும் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும் போதும் நூற்றுக் கணக்கான ரசிகர்கள் அவரை பார்க்க கூடியுள்ளனர் என்பதும் தனக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் ரசிகர்களுக்காக விஜய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி அவர்களை சந்தித்து வருவதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது விஜய் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் சாந்தனுவும் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் ”ஷிமோகாவை நோக்கி.... இப்போதைக்கு இவ்வளவுதான் அப்டேட்’ என்று குறிப்பிட்டு ஷிமோகா படப்பிடிப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது
Shivamogga ........
— Shanthnu ?? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 18, 2019
Ippodhiku ivlo dhan update ???? pic.twitter.com/X3k0FjGV1R
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments