ஜர்னலிஸம்க்கு மரியாதை கொடுங்கப்பா? பொய்செய்திக்கு சாந்தனுவின் அதிருப்தி பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னைப்பற்றிய பொய் செய்திக்கு அதிருப்தி தெரிவித்த நடிகர் சாந்தனு பாக்யராஜ் 'ஜர்னலிஸம்க்கு மரியாதை கொடுங்கப்பா? என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சாந்தனு ரூபாய் 15 கோடி சொத்து சேர்த்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ள நடிகர் சாந்தனு தனது அதிருப்தியை தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ’ஜர்னலிஸம்க்கு மரியாதை கொடுங்கப்பா? நூலளவு கூட உண்மை இல்லாத ஒரு செய்தியை, வெக்கமே இல்லாம இப்படி பொய்யான நியூஸ அடிச்சு விட்றீங்க. அவனவன் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகளை ஃபேஸ் பண்றான். நீங்க என்னடான்னா பொய்யான நியூஸ் போட்டு போட்டு நீங்கதான் எக்கச்சக்கமாய் சம்பாதிச்சி வச்சிருக்கீங்க’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
நடிகர் சாந்தனு தற்போது ’ராவண கூட்டம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout