விறுவிறுப்பாக அழைப்பிதழ் கொடுக்கும் ஷங்கர்: 2வது மகள் அதிதிக்கு திருமணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருவதால் அவரது இரண்டாவது மகளுக்கு திருமணம் என்ற வதந்தி இணையதளங்களில் பரவி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் ஊரடங்கு நேரத்தில் நடந்ததால் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக தான் அவர் நெருங்கிய உறவினர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை வைத்து அவரது இரண்டாவது மகள் அதிதிக்கு திருமணம் என தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அதில் எந்தவித உண்மையும் இல்லை ஷங்கர் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். ஷங்கரின் மூத்த மகள் திருமண வரவேற்பு மே 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கரின் 2வது மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com