இறந்த நடிகரை உயிர்த்தெழ வைக்கும் ஷங்கர்.. புதிய டெக்னாலஜி பயன்படுத்த திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு நடித்திருந்த நிலையில் இருவரையும் இந்த படத்தில் புதிய தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னரும் உயிர்ப்பித்து நடிக்க வைக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நெடுமுடி வேணு மற்றும் விவேக் நடித்திருந்தனர் என்பதும் நெடுமுடி வேணு ‘இந்தியன்’ படத்தில் நடித்த அதே கேரக்டரில் நடித்திருந்தார் என்று கூறப்பட்டது.
மேலும் முதல் முறையாக கமல்ஹாசனுடன் விவேக் நடித்த படம் ’இந்தியன் 2’ என்ற நிலையில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே காலமாகிவிட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் நெடுமுடி வேணு மற்றும் விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக வேறு நடிகரை வைத்து படமாக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவேக் மற்றும் நெடுமுடி வேணு காட்சிகளை முடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர்களுக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைத்து அதன் பின்னர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை விவேக் மற்றும் நெடுமுடிவேணுவாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு நடிகர்களுக்காக பின்னணி பேச டப்பிங் கலைஞர்களை தேர்வு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகியோர்களை மீண்டும் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com