ஒரே டிவிட்டில் 2 படங்களின் அப்டேட்டை தெரிவித்த ஷங்கர்.. செம்ம மாஸ் தகவல்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி அவர் கலந்து கொண்டு வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேம் சேஞ்சர் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக வந்துள்ளதாகவும் இனி அடுத்ததாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த படத்தின் சில்வர் புல்லட் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் தான் இயக்கி வரும் இரண்டு படங்களின் அப்டேட்டை ஒரே ட்விட்டில் தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.
ராம்சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wrapped up #GameChanger ‘s electrifying climax today! Focus shift to #Indian2 ‘s silver bullet sequence from tomorrow! pic.twitter.com/HDUShMzNet
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments