ஒரே டிவிட்டில் 2 படங்களின் அப்டேட்டை தெரிவித்த ஷங்கர்.. செம்ம மாஸ் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி அவர் கலந்து கொண்டு வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேம் சேஞ்சர் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக வந்துள்ளதாகவும் இனி அடுத்ததாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த படத்தின் சில்வர் புல்லட் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் தான் இயக்கி வரும் இரண்டு படங்களின் அப்டேட்டை ஒரே ட்விட்டில் தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

ராம்சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நெருங்கிய நண்பரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்.. வைரல் புகைப்படம்..!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நெருங்கிய நண்பர் ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தனது பகுதிக்கான படப்பிடிப்பை அவர்

பிளஸ் 2 தேர்வில் நடிகை தேவயானி மகள் இவ்வளவு மதிப்பெண்களா? குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை தேவயானியின் மகள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவருடைய மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

வெங்கட் பிரபு கேங்ஸ் உடன் மோதும் நாக சைதன்யா.. 'கஸ்டடி' படத்தின் 4 நிமிட புரமோ வீடியோ..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவான 'கஸ்டடி' என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில

அஜித்தை அடுத்து பூடான் நாட்டிற்கு சென்ற 'மங்காத்தா' நடிகை..!

நடிகர் அஜித் சமீபத்தில் உலக பைக் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக பூடான் மற்றும் நேபாளம் சென்றார் என்பதும் அங்கு அவரை அடையாளம் கண்டு கொண்ட அந்நாட்டு ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படம் மற்றும்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'களம் நமதே'.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'களம் நமதே' என்ற தீம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.