வெறும் ராஜமெளலி அல்ல, மஹா ராஜமெளலி: 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பிரமாண்டமான திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ நேற்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்களும், ஒரு சில கலவையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
எஸ்எஸ் ராஜமெளலியின் பிரம்மாண்டம் படத்தின் பல இடங்களில் இருப்பதால் இந்த படம் நிச்சயம் பாகுபலி, பாகுபலி 2 போலவே ஒரு வெற்றிப்படம் தான் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் எஸ்எஸ் ராஜமெளலி உள்பட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது வாழ்த்துக்களை ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் தனது டுவிட்டரில் ராஜமௌலியை மகா ராஜமௌலி எனப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
காலம் காலத்துக்கு எதிரொலிக்கப் போகும் கர்ஜனை… இந்த மாதிரி ஈடினையில்லாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. ராம்சரணின் ரேஜிங்கான நடிப்பு , ஜுனியர் என் டி ஆரின் இதயத்தைக் கவரும் நடிப்பு. உங்கள் கற்பனை ஈடு செய்ய முடியாதது ’மஹா’ராஜமௌலி’
Ravishing,Riveting,Robust.A Roar that’ll echo throughout times.Thanks to the whole team for an unparalleled experience.@AlwaysRamCharan-Raging Performance & Screen presence.@tarak9999 ‘s Radiant Bheem captivates your heart.Ur imagination stays undefeated,hats off “MahaRaja”mouli.
— Shankar Shanmugham (@shankarshanmugh) March 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments