கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே! ஷங்கர் வருத்தம்

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை முதல் திரையுலகினர்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில் ஒருசிலர் வெளிநாடுகளில் இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக 'சர்கார்' அமெரிக்காவில் படப்பிடிப்பில் விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் இருப்பதால் அவர்களால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை

இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணியின் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ளார். இதனால் அவராலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதுகுறித்து ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

தமிழின தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவருடைய மறைவு பேரிழப்பாகும். தற்போது நான் உக்ரைனில் இருப்பதால் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். அவரது குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவருடைய ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

More News

கருணாநிதி இறுதி ஊர்வலம் புறப்படும் நேரம் அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: தமிழக அரசு மேல்முறையீடா?

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று காலை உத்தரவிட்டதை அடுத்து

கருணாநிதிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி குறித்து பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கருணாநிதி சந்தித்த 14 இந்திய பிரதமர்கள்

திமுக தலைவர் கருணாநிதி தனது 80ஆண்டு கால அரசியல் வாழ்வில் இந்தியாவின் 14 பிரதமர்களை சந்தித்துள்ளார். வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத இந்த  பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு

மெரினாவில் கருணாநிதி சமாதி: கட்டுமான பணிகள் ஆரம்பம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்