ரஜினியின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது? ஷங்கர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் சிஜி பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று தனது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்தினை பரிமாறி கொண்டு '2.0' படத்தின் டீசர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்
'2.0' படத்தின் டீசர் பணிகள் முழுவீச்சில் Mobscene LA என்ற இடத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த டீசரிலேயே அதிகளவு சிஜி பணிகள் இருப்பதால் அந்த பணிகள் முடிந்தவுடன் டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இந்த தகவலால் அதிவிரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Hi Everyone,
— Shankar Shanmugham (@shankarshanmugh) January 26, 2018
Happy Republic Day.
The teaser work of 2.0 is going in full swing at Mobscene, LA. It involves lot of CG, so once it is done the teaser will be released. #2Point0 #teaser
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments