தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ’ஜென்டில்மேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஷங்கர் இயக்குனர் ஆக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலன்’ என்ற திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே கே.டி.குஞ்சுமோன் - ஷங்கர் இடையே மன வருத்தம் ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் அதன் பிறகு மீண்டும் இணையவில்லை என்றும் கூறப்பட்டது
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் கே.டி.குஞ்சுமோனும் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஷங்கருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ’கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கூறினார். இதற்கு ’நன்றி கே.டி.குஞ்சுமோன் சார்’ என்று ஷங்கர் பதில் அளித்துள்ளார்.
Thanks @KT_Kunjumon sir 🙏 https://t.co/bYV8cePlfk
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments